வெள்ளி, 15 மார்ச், 2013

R.P.OM'S விநாயகர் பாடல்கள் பொருளுடன் - அன்புடன் R.P.OM .


ஓம் ஓம் ஓம் 
R.P.OM'S  விநாயகர் பாடல்கள் 
க்கம் ன்புடன்  R.P.OM 8056156496
ஓம் ஓம் ஓம் 
******************************************************
சு ல்லா ஹரஹர ஓம் 
ராதே கிருஷ்ண ணேசா ஜெய ஜெய ஓம் 

ஓம் ஓம் ஓம் 


ஒரு குட்டி பிரார்த்தனை 

**************************
[றோம் என்றால் எல்லாம்,உலகம் ,உலகத்தில் உள்ள  எல்லா உயிர்களும்அவைகள் எல்லாமுமாய் ஆகி பறந்து விரிந்த ர பிரம்மம்  
ல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு குட்டி பிரார்த்தனை ]
*****************************************
ஓம் 

லமாக இருக்கிறோம் 

லமாக இருக்கிறோம் 

ளமாக இருக்கிறோம் 

ன்பே சிறந்த மதம் ன்பாய் இருப்போம் ன்பையே விதைப்போம்
ன்புடன் R.P.OM

ஓம் ஓம் ஓம் 
******************************************************

தந்தன தனதன தந்தன தனதன
     தந்தன தனதன ...... தனதான
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே (தி 1)

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே. 
கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி, அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே, என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும். ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும், மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே, (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே*, (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி, அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே.

* திரிபுரத்தின்மேல் படையெடுக்கத் தொடங்குகையில் சிவபெருமான் விநாயகரைப் பூஜிக்க மறந்தார். ஆதலால் சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சு முறியும்படி விநாயகர் செய்தார் என்பது சிவபுராணம்.
.
திருவாக்கும்  செய் கருமம் கை கூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் யானைமுகத் தானைக்
காதலால் கைகூப்பு வர்தம் கை

பொருள்:

சிவனின் மூத்த பிள்ளையை வழிபட்டால் அவனருளால் வழிபடுவோருக்கு சகல லட்சுமி கடாட்சம் சித்திக்கும், செய்திட நினைக்கும் காரியங்களும் இனிதே நிறைவேறிடும். செம்மையான சொற்களைப் பேசும் வாக்கு வல்லமை உண்டாகும். பெருமையும் வந்து சேரும்.

மக்களை நல்ல உரு உடையவர்களாக செய்யும். எனவே தேவர்களும் பயபக்தியுடன் யானைமுகக் கடவுளான விநாயகரை கைகூப்பி வணங்கி அவன் அருனை பெறுவர். ஆகவே மண்ணுலகில் உள்ள மக்களாகிய நாமும் விநாயகரை வழிபட்டு அவன் அருளை பெறுவோமாக.
**********************************************************************************
பா லும் தெளி தேனும் பாகும் பருப்பும்               
இவை நான்கும் கலந்து உனக்கு நான்
தருவேன் கோலம் செய் துங்க கரிமுகத்து
தூமணியே நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா!

பொருள்: பாலையும், தெளிந்த தேனையும், சர்க்கரை கலந்த பாகையும், வேக வைத்த கடலை பருப்பையும் கலந்து உனக்கு நான் நைவேத்தியமாக அர்ப்பணிக்கிறேன். கோலமிகுந்த (அழகு மிகுந்த) துங்க (துதிக்கை அமைந்த) கரிமுகத்து (யானை முகம் படைத்த) தூமணியே நீ எனக்கு இயல் (உரைநடை), இசை , நாடகம்  என முப்பரிமாணத்தில் மிளரும் தமிழ் மொ ழியை அருள்வாயாக.
*********************************************************************************

ஓம்!ஓம்! ஓம்!


அ ன்பே சிறந்த மதம் .அ ன்பாயிருப்போம் அ ன்பையே விதைப்போம் 
அ ன்புடன் R.P.ஓம் 8056156496


ஓம்!ஓம்! ஓம்!
******************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக