ஓம் ஓம் ஓம்
R.P.OM'S விநாயகர் பாடல்கள்
ஆக்கம் அன்புடன் R.P.OM 8056156496
ஓம் ஓம் ஓம்
******************************************************
ஓம் ஓம் ஓம்
ஒரு குட்டி பிரார்த்தனை
**************************
ஏசு அல்லா ஹரஹர ஓம்
ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்
ஓம் ஓம் ஓம்
ஒரு குட்டி பிரார்த்தனை
**************************
[றோம் என்றால் எல்லாம்,உலகம் ,உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும்அவைகள் எல்லாமுமாய் ஆகி பறந்து விரிந்த பர பிரம்மம்
எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு குட்டி பிரார்த்தனை ]
*****************************************
ஓம்
நலமாக இருக்கிறோம்
பலமாக இருக்கிறோம்
வளமாக இருக்கிறோம்
அன்பே சிறந்த மதம் அன்பாய் இருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.OM
ஓம் ஓம் ஓம்
******************************************************
தந்தன தனதன தந்தன தனதன
தந்தன தனதன ...... தனதான
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே (தி 1)
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.
* திரிபுரத்தின்மேல் படையெடுக்கத் தொடங்குகையில் சிவபெருமான் விநாயகரைப் பூஜிக்க மறந்தார். ஆதலால் சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சு முறியும்படி விநாயகர் செய்தார் என்பது சிவபுராணம்.
.
திருவாக்கும் செய் கருமம் கை கூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் யானைமுகத் தானைக்
காதலால் கைகூப்பு வர்தம் கை
பொருள்:
சிவனின் மூத்த பிள்ளையை வழிபட்டால் அவனருளால் வழிபடுவோருக்கு சகல லட்சுமி கடாட்சம் சித்திக்கும், செய்திட நினைக்கும் காரியங்களும் இனிதே நிறைவேறிடும். செம்மையான சொற்களைப் பேசும் வாக்கு வல்லமை உண்டாகும். பெருமையும் வந்து சேரும்.
மக்களை நல்ல உரு உடையவர்களாக செய்யும். எனவே தேவர்களும் பயபக்தியுடன் யானைமுகக் கடவுளான விநாயகரை கைகூப்பி வணங்கி அவன் அருனை பெறுவர். ஆகவே மண்ணுலகில் உள்ள மக்களாகிய நாமும் விநாயகரை வழிபட்டு அவன் அருளை பெறுவோமாக.
**********************************************************************************
பா லும் தெளி தேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு நான்
தருவேன் கோலம் செய் துங்க கரிமுகத்து
தூமணியே நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா!
பொருள்: பாலையும், தெளிந்த தேனையும், சர்க்கரை கலந்த பாகையும், வேக வைத்த கடலை பருப்பையும் கலந்து உனக்கு நான் நைவேத்தியமாக அர்ப்பணிக்கிறேன். கோலமிகுந்த (அழகு மிகுந்த) துங்க (துதிக்கை அமைந்த) கரிமுகத்து (யானை முகம் படைத்த) தூமணியே நீ எனக்கு இயல் (உரைநடை), இசை , நாடகம் என முப்பரிமாணத்தில் மிளரும் தமிழ் மொ ழியை அருள்வாயாக.
*********************************************************************************
ஓம்!ஓம்! ஓம்!
அ ன்பே சிறந்த மதம் .அ ன்பாயிருப்போம் அ ன்பையே விதைப்போம்
- அ ன்புடன் R.P.ஓம் 8056156496
ஓம்!ஓம்! ஓம்!
******************************************************
******************************************************